"இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்" - சீனா

#India #China
Prasu
3 years ago
"இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்" - சீனா

சீன வெளியுறவு மந்திரி வாங் யி, திடீர் பயணமாக கடந்த 25-ந் தேதி இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த வாங் யி, தனது இந்திய பயணம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இருதரப்பு உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது மற்றும் நடைமுறை சிக்கல்களை சரியாக தீர்ப்பது, கையாள்வது போன்றவற்றில் ஒருமித்த கருத்தை கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள். ஒருவரையொருவர் குறைத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!